Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 15 April 2025
webdunia

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

Advertiesment
asking money

J.Durai

, சனி, 5 அக்டோபர் 2024 (13:08 IST)
மதுரையில் அடையாளமாக இருக்கக்கூடிய வைகை நதியை சீரமைக்க பணி முடியும் வரை நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் கேட்டு மூன்று நபர்கள் ஆதின மடத்திற்கு வந்து மிரட்டல் கொடுத்ததாக கூறப்படும் நிலையில், பணம் தர மறுத்த ஆதினத்தை தரக்குறைவாக பேசியதாக மதுரை ஆதீனம் வேதனை தெரிவித்தார்.
 
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து மதுரை ஆதினம் பேசும்போது......
 
வைகை நதியை சுத்தம் செய்வது மிகப்பெரிய பணி, அதை அரசாங்கமே செய்ய முடியும், மற்றவர்களால் எப்படி செய்ய முடியும் எனவே பணம் கேட்டு வந்தவர்களை அனுப்பி விட்டதாகவும், மிரட்டல் தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளிக்க விரும்பவில்லை என ஆதீனம் கூறினார்.
 
அரசு இதுபோன்ற வைகை நதியை சுத்தம் செய்வதில் தலையிட வேண்டும். 
 
மேலும் துணை முதல்வராக பதவியேற்று இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். 
 
நடிகர்கள் குறித்து பேச மாட்டேன் என்று தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்: