எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

Prasanth K
சனி, 21 ஜூன் 2025 (14:06 IST)

திமுக கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதாக எதிர்கட்சிகள் கூறி வரும் நிலையில் அதுகுறித்து மதிமுக எம்.பி துரை வைகோ பேசியுள்ளார்.

 

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கூட்டணி கட்சியினர் கூடுதல் தொகுதிகள் கேட்பதாகவும், வேறு சில கூட்டணியில் இணையும் சாத்தியம் குறித்தும் பேசி வருவதாக அரசல் புரசலாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மதிமுக எம்.பி துரை வைகோ “வரும் சட்டன்மன்ற தேர்தலில் 12 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டிய நிர்பந்தத்தில் மதிமுக உள்ளது. கூடுதல் தொகுதிகள் தேவையென்ற ஆசை இருந்தாலும் தலைமை ஆலோசித்து என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்போம்.

 

வியாபார அரசியலில் ஈடுபடும் கட்சி மதிமுக இல்லை. சுயமரியாதை எங்களுக்கும் உண்டு. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments