மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 75 நாட்களில் சசிகலாவை தவிர வேறு யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் தான் ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்ததாகவும், அவரை நோக்கி தான் கும்பிட்டபோது அவரும் தன்னை பார்த்து வணக்கம் வைத்ததாகவும் டிடிவி தினகரன் பேட்டி ஒன்றில் கூறினார்.
மேலும் ஜெயலலிதா மருத்துவமனைய்யில் அனுமதிக்கப்பட்ட முதல் 10 நாட்கள் சசிகலாவை கூட பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் பத்து நாட்களுக்கு பின்னர் நான் உள்பட ஒருசிலர் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து தாராளமாக மத்திய அரசு கமிஷன் அமைக்கலாம் என்றும் அவ்வாறு கமிஷன் அமைத்தால் ஓபிஎஸ் அவர்களும் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும் என்றும் அவர் மேலும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.