Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'எங்கள் ஹீரோவை சந்தித்தேன் ' - நடிகை குஷ்பு

Advertiesment
'எங்கள் ஹீரோவை சந்தித்தேன் ' -  நடிகை குஷ்பு
, புதன், 14 ஜூலை 2021 (16:12 IST)
தமிழக பாஜக மாநிலத் தலைவராகப் பலர் பொறுப்பு வகித்திருந்தாலும் இதில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், எல், முருகனும்தான்.

தமிழிசை சவுந்தராஜனின் உழைப்புக்கு வெகுமதியாக அவரைத் தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்தது பாஜக அரசு. சமீபத்தில் முன்னாள் பாஜக தலைவர் எல்.முருகனை புதிதாக மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை, மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகப் பதவி வழங்கியது.

குறைந்த காலத்தில் அவரது உழைப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அவரது தலைமையில் பாஜக சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதியில் வென்றது. எல்.முருகன் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தாராபுரத்தில் தோற்றார்.
webdunia

அதேபோல், நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக பிரபலங்கள் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில், நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், அமைச்சர் எல். முருகனுக்குப்புகழாரன் சூட்டியுள்ளார். அதில்,  டெல்லியில் பாஜக அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக எங்கள் ஹீரோ எல்.முருகன் பொறுப்பேற்றுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக பாஜகவிற்கு 150 எம்.எல்.ஏக்கள் ?..... அண்ணாமலை