Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமெண்ட்ஸ் பார்த்து சலித்துப் போச்சு... நான் சுத்த சுயம்பிரகாச தமிழன் – ஹெச். ராஜா ’டூவீட்’

கமெண்ட்ஸ் பார்த்து சலித்துப் போச்சு... நான் சுத்த சுயம்பிரகாச தமிழன் – ஹெச். ராஜா ’டூவீட்’
, வியாழன், 2 ஏப்ரல் 2020 (17:49 IST)
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா அவர் இன்று நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதில் கூறி வருகிறார்.

அதில், தமிழகத்தில் 110 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் 235 பேர் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தனியார் தொலைக்காட்சியின் புகைப்படத்தைப் பதிவிட்டு, அதற்கு மேல், நெட்டிசன்கள் எழிப்பிய கேள்விகளுக்கு அளித்த சுவாரஸ்யமான பதில்கள் கீழே உள்ளது.

*யோவ் யோவ் சும்மா உருது தெரியலனு அடிச்சு விடாதயா ??

அது உருது அல்ல வங்காளி. ஆமாம் உங்களுக்கு புரியலைனா கொல்கத்தா போய் வங்காளியில் பேசிய ஸ்டாலினிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

*உங்களுக்கு புரியலைனா கொல்கத்தா போய் வங்காளியில் பேசிய ஸ்டாலினிடம்// இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 'கொல்கத்தா போய் வங்காளியில் பேசியதாக நினைத்துக்கொண்ட ஸ்டாலினிடம்' என்று சரியாக சொல்லுங்கள்.

ஆகட்டும் குருநாதா

*அது வங்காளி அல்ல பெங்காளி

வ வும், ப வும் எப்படி வேண்டுமானாலும் மாற்றி உபயோகிக்கலாம். தமிழ் இலக்கணம் படிங்க. வில்லர்கள, பில்லர்கள், இரண்டும் ஒன்றே. 10 வகுப்பு பாடம்.

*உனக்கு எப்படி வங்காள மொழி தெரிஞ்சுது?

நான் 1980-84 மத்தியப் பிரதேசத்தில் coal india ல் பணியாற்றினேன். அது தேசிய உண்மை ஆக்கப்படுமுன் பெங்கால் கோல் ஃபீல்டு ஆக இருந்தது. எனவே நிறைய பெங்காலிகள் மத்தியில் 4 ஆண்டுகள் வசித்ததால்

*உங்களுக்கு வடமொழி புரியும் நீங்கள் வட நாட்டவர் தானே என்று 

இந்த மாதிரி காமெண்ட்ஸ் பார்த்து சலித்துப் போச்சு தம்பி. நான் சுத்த சுயம்பிரகாச தமிழன் இங்க உள்ள பல திக, திமுக காரர்களைவிட. தஞ்சாவூர் அகரமாங்குடி சொந்த ஊர், பிறந்தது பக்கத்திலுள்ள மெலட்டூர். எனது பாட்டனார் பெயர் சிவ சிதம்பரம் இப்பெயர் தமிழகத்திற்கு வெளியில் இருக்காது. புரிந்ததா என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாறுமாறாய் விலை கூடிய ஆப்பிள் ஐபோன்(ஸ்)!!