தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நேற்று நியமனம் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. அவர் இன்று பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் அடுத்த கல்விஆண்டு முதல் பாடல் புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தை இருக்காது என்றும் அதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்று தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்
தற்போது ஒன்றிய அரசு என்ற வார்த்தையை அனைவரும் கூறத் தொடங்கி விட்டார்கள் என்றும் டிவி செய்திகளிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினார். 2022 ஆம் கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற சொல்லுக்கு பதிலாக ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் திண்டுக்கல் ஐ லியோனியின் இந்த கருத்துக்கு பாஜக மற்றும் அதிமுகவிடம் இருந்து எதிர்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது