நடிகர் விஜய் யார் என்று எனக்கு தெரியாது என ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய் கல்வி விழா ஒன்றை நடத்தினார் என்றும் இதனை அடுத்து அவர் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்றும் கூறப்பட்டுள்ளது.
அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அரசியலில் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்
அந்த வகையில் ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது நடிகர் விஜய் யார் என்று எனக்கு தெரியாது என்றும் சினிமாவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது என்றும் அப்படி இருக்கும்போது விஜயை பற்றி எனக்கு எப்படி தெரியும் என்று தெரிவித்தார்.
மேலும் இனிமேல் தமிழகத்தில் சினிமாவில் இருந்து வந்த ஒருவர் அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கினார் என்றால் அதற்கு காரணம் 30 ஆண்டுகள் தனது ரசிகர் மன்றத்தை அவர் அரசியலோடு இணைத்து வைத்திருந்தார் என்றும் அவர் திமுகவிலிருந்து வெளியேறிய போது கிட்டத்தட்ட பாதி திமுக அவரிடம் இருந்ததால்தான் அவரால் அதிமுக உருவாக்கும் போது அதை வெற்றிகரமான ஆளு கட்சியாக ஆக்க முடிந்தது என்றும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு ஒரு அரசியல் கட்சியை தொடங்கி வெற்றி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதே பிரச்சனை தான் ரஜினிக்கு இருந்தது என்றும் ஒரு கூட்டத்தை அமைப்பாகவோ கட்சியாகவோ மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.