Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியிடம் உயிர் பிச்சை கேட்கிறேன் : ராமர் பிள்ளை வீடியோவில் கதறல்

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (16:02 IST)
பாரத பிரதமருக்கும் , உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கருணை மனு என்ற தலைப்பில் ராமர் பிள்ளை என்பவர் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் இதுதான் என் கடைசி பேட்டி இனிமேல் நான் காணொளியில்  பேச மாட்டேன். இதை எனது இறுதி வாக்குமூலம் என்று கூட சொல்லலாம் என்று கூறியிருக்கிறார்.
அவர் இந்த வீடியோவில் கூறியுள்ளதாவது:
 
என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் : மூலிகை பெட்ரோல் குறித்த எனது செயல் விளக்கத்தை நான் அளித்த வாக்குறுதியின் படி வரும் 10 ஆம் தேதிக்குள் அளிப்பேன். அதற்காகத்தான் வரும் 10 தேதியை நான் தேர்வு செய்திருக்கிறேன். 
ஆகவே உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர வழக்காக எடுத்து இதை விசாரிக்க வேண்டும். நான் உங்கள் முன் மூலிகை பெட்ரோலை உற்பத்தி செய்து காட்டுகிறேன்.அதை  நீங்கள் சோதனைக்கு அனுப்பி வையுங்கள். இதை எனது வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ளுங்கள்.  நான் சரியாக நிரூபிக்கா விட்டால் என்னை சிறையில் அடைக்கலாம்: அல்லது  தூக்கில் கூட போடலாம். நான் எதற்கும் தயார்.
 
நான் வரும் 11ஆம் தேதி உயிருடன் இருப்பேனா இல்லையா என்பது மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தழிழிசை சவுந்தரராஜன் கையில்தான் இருக்கிறது.
 
பொன் ராதாகிருஷ்ணனும் , தமிழிசையும் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு திரு. மனோகர் ஜோஷியிடம் இந்த மூலிகை பெட்ரோல் குறித்து பேச வேண்டும்.
 
நான் மரணத்தருவாயில் நின்று இதை உயிர் பிச்சையாக கேட்கிறேன். இந்த ஏழை கண்டறிந்தது உண்மையா இல்லையா என்பதை  அவர்கள் தான் உலகிற்கு கூற வேண்டும் இவ்வாறு அந்த வீடியோவில் ராமர் பிள்ளை உருக்கமாக பேசியிருக்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments