Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு நான் மௌன விரதம் : காமெடி செய்த இளங்கோவன்

Advertiesment
EVKS. Elangovan
, புதன், 6 ஜூலை 2016 (15:38 IST)
காங்கிரசின் புதிய தலைவர் யார் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கரூரில் மெளனத்தை தெரிவித்தார்.


 

 
காங்கிரஸ் பிரமுகர் மகாமுனி இல்லத்திருமண விழா கரூர் அடுத்த பசுபதிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 
 
அப்போது புதிய தலைவர் அறிவிக்கும் வரை பத்திரிக்கையாளர்களை பொறுத்தவரை நான் மெளன விரதம் என்றார்.
 
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்துள்ளார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை, தமிழக காங்கிஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபன்னா இதை உறுதி செய்துள்ளார். தேர்தலில் காங்கிரஸ் எதிர்ப்பார்த்த வெற்றி பெறாததற்கு பொறுப்பேற்று இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். 
 
காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தனது ராஜினாமா கடிதத்தை இளங்கோவன் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்க, அதிகாரபூர்வமாக அவர் ராஜினாமா செய்தது உறுதியாகி விட்டது. இந்நிலையில் புதிய தலைவர் யார் என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு, பதில் கூறிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் அறிவிக்கும் வரை நான் மௌன விரதம் என்று கூறி சென்றார்.
 
எப்போதுமே, மணிக்கணக்கில் பேசும், இவர் தற்போது இந்த புதிய தலைவர் யார் என்ற விஷயம் குறித்தும், மற்ற விஷயங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்க அச்சத்தில் ஆழ்ந்துள்ளார் என்ற விஷயம் வெளியாகி உள்ளது.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமாரின் ஒப்புதல் இல்லாத ஜாமீன் மனு: காவல்துறை எதிர்ப்பு