Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் முதல்வன் திட்டம் இளைஞர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Advertiesment
MK Stalin
, திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (20:02 IST)
நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  ''நான் முதல்வர் திட்டம் என் கனவு திட்டம், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபின் அனைத்து துறைகளும் தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. அனைத்து தரப்பினரும் வளர்ந்து வருகின்றனர்'' என்று கூறியுள்ளார்.

மேலும்,   ''நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர். நான் முதல்வன் திட்டம் இளைஞர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம். இத்திட்டத்தின் மூலம் 1. 5 லட்சம் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக'' கூறியுள்ளார்.

மேலும், ''இத்திட்டத்தில் ஆண்டிற்கு 10 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது தான் இலக்கு. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துகள், ஐஏஎஸ் அதிகாரி இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலங்களுக்கான அதிகாரங்கள் டெல்லிக்கு பொருந்தாது;உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி