Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் பங்காரு அடிகளாரின் பக்தை.. சனாதனத்தை நிறுவியவர் அவர்! – பிரேமலதா விஜயகாந்த்!

நான் பங்காரு அடிகளாரின் பக்தை.. சனாதனத்தை நிறுவியவர் அவர்! – பிரேமலதா விஜயகாந்த்!
, வெள்ளி, 20 அக்டோபர் 2023 (12:06 IST)
ஆன்மீக குருவாக விளங்கிய பங்காரு அடிகளார் மறைவு என்பது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார் பிரேமலதா விஜயகாந்த்


 
புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டை கருவேப்பிளான் ரயில்வே கேட்டு பகுதியில் தேமுதிக சார்பில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் “ஆன்மீக குருவாக விளங்கிய பங்காரு அடிகளார் மறைவு என்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நான் சிறு வயதில் இருந்தே பங்காரு அடிகளார் தீவிர பக்தை
ஏற்கனவே திட்டமிட்டபடி புதுக்கோட்டைக்கு வர வேண்டி இருந்ததால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த என்னால் முடியவில்லை. வேறொரு நாளில் அவரது குடும்பத்தாரை சந்தித்து அஞ்சலி செலுத்த உள்ளேன்

தற்போது நாம் சனாதனம் குறித்து பேசி வருகிறோம் ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சனாதனத்தை நிரூபித்தவர் பங்காரு அடிகளார். பெண்கள் கருவறை வரச் சென்று பூஜை செய்யலாம் என்று அப்போதே அறிவித்து அதை நடைமுறையும் படுத்தி புரட்சியை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார். பெண்களின் சபரிமலை என்று அழைக்க கூடிய அளவிற்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை வடிவமைத்தவர்.

திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக செய்து வருகிறது குறிப்பாக மகளிர் உரிமை தொகை விஷயத்தில் தேர்தலுக்கு முன்பாக ஒரு நிலைப்பாட்டையும் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிறகு தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறியும் உள்ளது இதனால் பல்லாயிரம் பெண்களுக்கு உரிமை தொகை கிடைக்காமல் உள்ளது அரசு பெண்கள் தகுதி என்ன என்பது நிர்ணயம் செய்துள்ளது  குறித்து இதுவரை தெளிவு இல்லை. மகளிர் உரிமைத்தொகை விவகாரம் திமுகவிற்கு பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும்

ஒரு திட்டத்தை அறிவித்தால் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் நிறைவேற்ற முடியாத திட்டம் என்று தெரிந்தே தேர்தலுக்கு முன்பாக திமுக பொய்யான வாக்குறுதியை அழித்து தற்போது திண்டாடி வருகிறது. தற்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது கிடையாது

தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளது என்பதை குறித்து நிலைபாடு ஜனவரி மாதத்தில் விஜயகாந்த் அறிவிப்பார். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இதுவரை தெளிவு இல்லை.

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நான்கு முறை  நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்னமும் அமைச்சராக அவரை தொடர செய்வது திமுகவிற்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினரும் செந்தில் பாலாஜி எந்த அளவுக்கு நெருக்கமாக உள்ளார் என்பதை காட்டுகிறது

போதை இல்லாத தமிழகம் என்று முதல்வர் கூறிவரும் நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை படிப்படியாகத்தான் டாஸ்மார்கள் மூட முடியும் என்பது உண்மைதான் இருந்தாலும் பூரண மதுவிலக்கு நோக்கி தமிழகம் செல்ல வேண்டும் தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில் விற்பனை இலக்கு விரைவில் நிர்ணயம் செய்யப்பட்டு அது 100 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும்

இளைஞர்கள் பெண்கள் உட்பட அனைவருமே தற்போது மது மற்றும் போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளது வேதனை அளிக்கக் கூடியது அளிக்கக் கூடியதாக உள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார சீர்கேடு உள்ளது

அனைத்தும் இலவசம் என்று கூறும் அரசு கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாக வழங்க வேண்டும் அதுதான் ஒரு நல்ல அரசுக்கு அடையாளம்

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த அரசு தமிழகதிற்கு நல்லது செய்கிறதோ அந்த கூட்டணியில் தான் தேமுதிக இருக்கும் இதுவரை தமிழகத்திற்கு யாரும் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.”

பேட்டியின் போது தேமுதிக மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் நகரச் செயலாளர் பரமஜோதி உட்பட பலர் உடனிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவேயில்லை! – சாலை மறியல் செய்த பெண்கள்!