Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்

Advertiesment
நான் கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்:  உதயநிதி ஸ்டாலின்
, ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (07:26 IST)
நான் கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது நான் ஒரு கிறிஸ்துவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் என்னை கிறிஸ்துவன் என்று அழைத்தால் நான் கிறிஸ்துவன். இந்து என்று அழைத்தால் நான் இந்து. முஸ்லிம் என்று அழைத்தால் நான் முஸ்லிம் என்று தெரிவித்தார்.

மேலும் எனக்கு என்று ஜாதியும் மதமும் கிடையாது என்றும் பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் என கலவையான விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன. ஒரு அமைச்சராக இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் எனக் கூறுவது அவரது பதவிக்கு அழகு அல்ல" என்றும் பல நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றுகிறார்கள்: சென்னை வானிலை மையம்