Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணைக் கொடுக்காததால் மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த கணவன்!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (18:38 IST)
தன் மனைவி கொடுப்பதாக சொன்ன 10 லட்ச ரூபாய் வரதட்சனை பணைத்தைக் கொடுக்காததால் அவரது அந்தரங்க புகைப்படத்தைக் கணவரே இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அயனாவரத்தைச் சேர்ந்த அந்த பெண் ஏற்கனவே ஒரு முறை திருமணம் ஆகி விவாகரத்து ஆகியுள்ளது. அதன் பின்னர் விஜயபாரதி என்பவரோடு அந்த பெண் நெருக்கமாக பழகியுள்ளார். 5 ஆண்டுகள் காதலர்களாக இருந்த அவர்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்தின் போது விஜயபாரதி மனைவி குடும்பத்திடம் 10 லட்சம் கேட்டுள்ளார்.

ஆனால் அதை அவர்கள் கொடுக்காததால் விஜயபாரதிக்கும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் அவரது மனைவி கணவன் வீட்டை விட்டு தன் தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதும் விஜயபாரதி வரதட்சணைக் கேட்க அவர் போலிஸில் புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமாக விசாரிக்க போலிஸார் அழைக்க விஜயபாரதி தான் விழுப்புரத்தில் இருப்பதாக சொல்லியுள்ளார்.

இதனிடையே மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார், இதைபார்த்த அவரது மனைவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது சம்மந்தமாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜயபாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments