Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தேகத்தால் மனைவியை சுவற்றில் மோதி கொன்ற கணவன்

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2016 (10:31 IST)
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையை சுவற்றில் மோதி கொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
 

 
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் இவரது மனைவி அல்லி (22) இவர்களுக்கு சதாசிவம் (4), சிவா (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். வெங்கடாச்சலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருவக்கரைக்கு வந்து குடியேறி உள்ளார்.
 
பிறகும் அங்குள்ள கல் உடைக்கும் நிறுவனத்தில் கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் வெங்கடாசலத்திற்கு மனைவி அல்லியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
இதனால், தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனையடுத்து கணவன் - மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
 
இந்தநிலையில், வெங்கடாச்சலம் நேற்று இரவு குடித்து விட்டு வந்து, குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த அல்லியை எழுப்பி சண்டை போட்டுள்ளார். ஆத்திரத்தில், அல்லியின் தலையை சுவற்றில் பலமுறை மோதினார்.
 
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அல்லி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து வெங்கடாச்சலத்தை கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments