Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்று எம்.ஜி.ஆர்.. இன்று ஜெயலலிதா.. அப்படியே நடந்தது..

அன்று எம்.ஜி.ஆர்.. இன்று ஜெயலலிதா.. அப்படியே நடந்தது..

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2016 (10:04 IST)
உடல் நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 

 
அவர் விரைவில் குணமடைய வேண்டி அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். அதேபோல் அப்பல்லோ வாசலில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவ்வப்போது பிரார்த்தனை செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில், முதல்வர் பூரண நலம் பெற்று, ஆயுள் நீடிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் யாகம் செய்து, பிரசாதத்தை எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை வந்தார் கைலாச சங்கர தீட்சிதர். 
 
ஆனால், அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன்பின், மேலிடத்தின் அனுமதி பெற்று அவர் மட்டும் உள்ளே சென்றார்.
 
1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர் உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது, இதேபோல் யாகம் செய்து பிரசாதம் எடுத்து வந்தாராம். அதனாலேயே அவருக்கு அனுமதி கிடைத்ததாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

$304 மில்லியன் மதிப்பில் ஏவுகணைகளை வாங்கும் துருக்கி.. விற்கும் அமெரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன?

டிரம்ப் அமெரிக்க அதிபர்.. ஆனால் மோடி உலக தலைவர்.. ட்வீட் போட்டு உடனே டெலிட் செய்த கங்கனா..!

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது. ப சிதம்பரம் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments