கல்யாணம் ஆன பின்னும் காதலன் எண்ணம்; மனைவியை கொன்ற கணவன்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (14:08 IST)
திருமணமான பின்னும் காதலனை மறக்காத மனைவியை கணவனே வெட்டி கொன்ற சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு முன்னதாக திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் கஸ்தூரி என்பவரை திருமணம் செய்துள்ளார். கஸ்தூரி தனது ஊரில் இருந்தபோது ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த நபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், கஸ்தூரி கண்ணனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் கஸ்தூரி தனது காதலன் நினைவாகவே இருந்ததால் அடிக்கடி கண்ணனுக்கும், கஸ்தூரிக்கும் சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கண்ணனிடம் சண்டை போட்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்று விட்ட கஸ்தூரி அங்குள்ள ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேலைக்கு சென்று திரும்பிய கஸ்தூரியை ஆள் இல்லாத பகுதியில் வழிமறித்த கண்ணன் அரிவாளால் கஸ்தூரியை வெட்டி கொன்றுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கண்ணனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments