தாயின் தகாத உறவு… தந்தையின் பொல்லாத கோபம் – அனாதையான இரண்டு குழந்தைகள் !

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:56 IST)
மதுரையில் தகாத உறவில் ஈடுபட்ட தனது மனைவியைக் கொன்று ஆழ்துளை கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவாகியுளார் அவரது கணவர்.

மதுரை அலங்காநல்லூரில் வசித்து வரும் தம்பதியினர் வெள்ளை பிரியன் - அபிநயா. இவர்கள் இருவரும் பெற்றொரின் எதிர்ப்பை மீறி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களின் காதலுக்கு அடையாளமாக இரண்டு குழந்தைகள் உள்ளன. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் புயலாக வந்துள்ளது அபிநயாவின் கள்ளக்காதல். அபிநயாவுக்கு அதேப் பகுதியைச் சேர்ந்த ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையறிந்த வெள்ளைப் பிரியன் மனைவியைக் கண்டித்துள்ளார். கணவனின் கண்டிப்பைக் கண்டுகொள்ளாத அபிநயா கள்ளக்காதலை விடாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த , அபிநயாவைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு உடலை ஆழ்துளைக் கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளார். அபிநயாவின் உடலைக் கண்டுபிடித்த போலிஸார் பிரியனைக் கைது செய்துள்ளனர். தாயின் கள்ளக்காதலாலும் தந்தையின் கோப முடிவாலும் குழந்தைகள் இருவரும் இப்போது அனாதையாக ஆகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments