Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி முனையில் சிறுமிகள் பலாத்காரம் – பீஹாரில் நடந்த அநியாயம் !

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:51 IST)
குடும்பத்தோடு சென்றுகொண்டிருந்த இரண்டு சிறுமிகளை துப்பாக்கி முனையில் கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள சுபால் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு நோக்கி திரும்பியுள்ளது. அவர்கள் சிலோன் ஆற்றின் அருகே வந்து கொண்டிருந்த போது துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துள்ளது. கொள்ளைக் கும்பல் என நினைத்த அவர்கள் பதற கும்பலோ அந்த கூட்டத்தில் இருந்த இரு சிறுமிகளையும் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர். அதில் ஒரு சிறுமி பலாத்காரத்துக்கு ஒத்துழைக்காததால் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அந்த சிறுமி மயங்கி விழ அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளது.

இது சம்மந்தமாக போலிஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சுடப்பட்ட சிறுமி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்