Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியை கொலை செய்து தலையை பைக்கில் எடுத்து சென்ற கணவன்!

Advertiesment
தலை
, புதன், 17 ஏப்ரல் 2019 (09:27 IST)
ஈரோடு அருகே வாலிபர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு பின்னர் தலையை பைக்கில் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகத்தை சேர்ந்த முனியப்பன் என்பவர் நிவேதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பெற்றோர்கள் அனுமதி அளிக்காததால் இருவரும் ஈரோடு பகுதிக்கு குடியேறினர். முனியப்பன் டிரைவராகவும், நிவேதா சூப்பர் மார்க்கெட் ஒன்றிலும் வேலை பார்த்தனர்
 
இந்த நிலையில் நிவேதா வேறொரு ஆணுடன் பழகுவதாக முனியப்பன்  சந்தேகப்பட்டதாகவும் இதுகுறித்து இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கோபித்து கொண்ட நிவேதா தன்னுடைய தாய் வீட்டிற்கு கிளம்புவதாக கூறியுள்ளார். அவரை சமானதப்படுத்த முயன்ற முனியப்பன் பின்னர் வேறு வழியில்லாமல் தானே பைக்கில் அம்மா வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி அவரை அழைத்து சென்றுள்ளார். 
 
ஆனால் போகும் வழியில் ஆள் இல்லாத இடத்தில் பைக்கை நிறுத்தி நிவேதாவின் கழுத்தை அறுத்து முனியப்பன் கொலை செய்துள்ளார். தலை, உடல் என தனித்தனியாக பைக்கில் வைத்து முனியப்பன் கொண்டு சென்றபோது திடீரென பைக் நிலை தடுமாறியதால் தலை பைக்கிலும், உடல் மட்டும் கிழேயும் விழுந்துவிட்டது. இதனை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து முனியப்பனை சுற்றி வளைத்து பிடித்து பின்னர் காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலூர் தேர்தல் ரத்து: தவறு நடந்துவிட்டது? எடப்பாடியார் திடீர் டிவிஸ்ட்!