குழந்தை இல்லாத விரக்தியில் கணவன் - மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (10:14 IST)
ஈரோட்டில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் - மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன்(56). இவரது மனைவி ராஜாமணி (45). இவர்களுக்கு குழந்தை கிடையாது. கணவன் - மனைவி திருமண விழாவில் சமையல் வேலை பார்த்து வந்தனர்.  தனிமையில் வாடிய தம்பதியினர் விரக்தியில் நேற்று இரவு 8 மணியளவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த ஈரோடு ரெயில்வே போலீசார்   இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
போலீசார் நடத்தி முதல் கட்ட விசாரணையில் மாதேஸ்வரன் காசநோயால் அவதிப்பட்டு, நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்தார். மேலும் கடன் வாங்கி அந்த கடனை அடைக்க முடியாமலும் கஷ்டப்பட்டார். மேலும் குழந்தை இல்லாத ஏக்கமும் அந்த தம்பதியை வாட்டி வந்தது. இதனால் தம்பதியினர் தற்கொலை செய்ய முடிவு செய்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறுவை சிகிச்சை செய்தாலும் படுக்கையில் இருந்து வேலை செய்ய வேண்டும்.. மேனேஜர் அழுத்தத்தால் பெண் அதிர்ச்சி..!

எம்ஜிஆர் பெயரை விஜய் சொல்வது எங்களுக்கு சந்தோசம் தான்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பக்தர்கள் பரவசம்..!

22 மாவட்டங்களில் இன்று கனமழை.. நெருங்கி வருகிறதா காற்றழுத்த தாழ்வு மையம்?

பொளந்து கட்டிய கனமழை.. இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?

அடுத்த கட்டுரையில்