Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்காரின் சர்ச்சையை சமாளிக்குமா விஜய்யின் சர்கார்?

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (11:57 IST)
முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  
 
குறிப்பாக, சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த பலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
ஆளும் கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், காங்கேயம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு விஜய், இயக்குனர் முருகதாஸ் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
 
அதன் பின்னர் அமைச்சர் ஜெயகுமார், அரசியலுக்கு வரவிருக்கும் நடிகர்கள் அவர்களது படத்தில் அவர்களின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும், அதைவிட்டுவிட்டு அரசை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் சர்கார் படத்தை எடுத்திருப்பார்களா? விஜய் இந்த படத்தில் நடித்திருப்பாரா? கண்டிப்பாக நடித்திருக்கமாட்டார். விஜய் என்றும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என விமர்சித்தார். 
 
பாஜக மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் நான் படத்தை இன்னும் பார்க்கவில்லை. எனவே கருத்து கூற விரும்பவில்லை என கூறி விலகினார். படத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இதனை சர்கார் படக்குழு எவ்வாறு சமளிக்க போகிறது என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது. 
 
இது படக்குழுவினரோ, திரை உலகை சேர்ந்தவர்களோ பெரிதும் எதுவும் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments