Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எவ்வளவு பெருமை கரூர் அரசு கலைக்கல்லூரி !? ஆனால் ஒரு சிலரால் முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள்

எவ்வளவு பெருமை கரூர் அரசு கலைக்கல்லூரி !? ஆனால் ஒரு சிலரால் முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள்
, வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (22:57 IST)
1966 ம் ஆண்டு தமிழக அரசால், கரூர் பகுதி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது  கரூர் அரசுக் கலைக் கல்லூரி, இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பொழுது சென்னை பல்கலை கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த இந்த கல்லூரி 5 இளங்கலை படிப்புகளுடன் தொடங்கப்பட்டது.

1972ஆம் ஆண்டு வரை வரை ஆண்கள் கல்லூரியாக மட்டுமே இருந்த இந்த கல்லூரி அதன்பின்பு ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இருபாலரும் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டது.  இதன்மூலம் ஆண்கள், பெண்கள் என கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை மட்டுமில்லாமல் மாவட்ட அளவிலான மாணவர்கள் இக்கல்லூரியின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.  1984 - 85 கல்வியாண்டு முதல் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரி 1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில அரசினால் இளங்கலை பட்டப்படிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கணினி அறிவியல் படிப்பினை,  தமிழ்நாட்டில் முதன்முறையாக கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்த்து பெருமை அடைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த  2000 மாவது ஆண்டு முதல் கணினி படிப்புகள் அல்லாத பயிலும் மாணவர்களுக்கும் கணினி கற்பிக்கும் பாடத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2001ஆம் ஆண்டு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை குழுவினரால் மூன்று நட்சத்திர அந்தஸ்து பெற்றது.

2006 ஆம் ஆண்டு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை குழுவினரால் "'பி +'" தர சான்றிதழ் பெற்றது. அதே ஆண்டு தமிழ்நாடு மாநில அரசினால் சுயநிதி கல்வி பாடத்திட்டங்கள் அனைத்தும் பொதுப் பிரிவாக மாற்றப்பட்டு மாற்றப்பட்டு அதன்படி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். 2007 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய குழுவினரால்  இந்த கல்லூரி தன்னாட்சி அந்தஸ்தினை அடைந்தது. 2014 ஆம் ஆண்டு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை குழுவினரால் பி+ தரத்திலிருந்து "'ஏ என்ற தரத்திற்கு இந்த கல்லூரி உயர்த்தப்பட்டது. தன்னாட்சி அந்தஸ்தினை அடைந்தது முதல் இக்கல்லூரி படிப்படியாக தனது உள் கட்டுமானங்கள், நூலக வசதி, கல்லூரி அரங்கம், ஒவ்வொரு துறையினருக்கான தனித்தனி ஆய்வக வசதி, இணையவழி பயன்பாடுகள் என அனைத்திலும் முன்னேறி வருகிறது புள்ளியியல், நிலவியல் போன்ற பல்வேறு பாடத்திட்டங்களை தனது கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்த்து வருகிறது. முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி படிப்புகளில் சேர்ந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். முனைவர் பட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

  மொத்தம் 17 பாடங்கள் இளங்கலை பிரிவிலும் 12 பாடங்கள் முதுகலை பிரிவிலும்.  இந்த கல்லூரியின் மூலம் கற்பிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு தமிழ், ஆங்கிலம் என மொழிப் பிரிவு கற்கும் மாணவர்களுக்கான ஆய்வு வசதி செய்து தரப்பட்டுள்ளது் ஒவ்வொரு வருடமும் தனது ஆசிரியர்களை பெருகிக்கொண்டே போகும் இந்த கல்லூரியில் தற்சமயம் 115 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 62 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆவார். ஒவ்வொரு வருடமும் மாநில அளவிலும், கல்வி அளவிலும், விளையாட்டுகளிலும் இந்தக் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்று பல்வேறு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  மேலும் தற்போது இந்த கல்லூரியில் 4800 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இது தவிர சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து 12 உதவி பேராசிரியர்கள் பணிநிரவல் மூலம் தமிழ்நாடு அரசால் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த கல்வியாண்டில் 2020 - 2021 மாணவர் சேர்க்கையின் போது கல்லூரி வளாகத்திலேயே 8 ஆர்.ஒ வாட்டர் பிளாண்ட் மிஷின்கள் இருந்தும் அவற்றில் ஒன்று கூட வேலை செய்ய வில்லை, அதுமட்டுமில்லாமல், கல்லூரி வளாகத்தில் எந்த ஒரு பெருளும் சேதம் அடைந்தாலோ, அல்லது பழுதடைந்தாலோ அதை உடனடியாக கல்லூரி நிர்வாகம் சரிசெய்யப்படுவதில்லை, இதுமட்டுமில்லாமல், கல்லூரியில் உள்ள ஒரு அறையில் 200 இரும்பு சேர்கள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் வீணாகும் நிலையில் மாணவர் பயன்பாட்டிற்கு கொடுக்காமல், வைத்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, கல்லூரியின் வகுப்பறைகளில் பெருமளவில் ஏராளமான குப்பைகளும், காகிதங்களும் காணப்படுகின்றன. கல்லூரியில் உள்ள சில கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் அரசாங்க பணம் வீணாகி வருகின்றன. இதற்கெல்லாம் பெருப்பு வகிக்க கூடியவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை என்கின்றனர் இந்த கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களும், இந்த கல்வியாண்டின் சேர்க்கைக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்கள் கேள்விக்குறி எழுப்பி உள்ளனர்.  தமிழக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் பெருமை வாய்ந்த இந்த கல்லூரியில் இவ்வளவு குப்பைகளும், காகிதங்களும் கிடக்கும் நிலையில் இந்த கல்லூரியின் நிர்வாகமே கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கல்லூரியின் கண்காணிப்பாளர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்றும் தெரியவில்லை என்கின்றனர் முன்னாள் மாணவர்களும், சமூக நல ஆர்வலர்கள்
 
கல்லூரியின் முதல்வர் கெளசல்யா தேவி அவர்களை வேலை செய்ய விடாமல் கல்லூரியில் சிலர் அவருக்கு நிர்வாகத்தில் தவறான தகவலை அளித்து வருகின்றனர். இது அரசு விதிக்கு எதிரானது. கல்லூரியின் கண்காணிப்பாளர் அவருடைய வேலையின் வரம்பிற்கு மீறி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கல்லூரியின் பி.டி.ஏ வில், 77 லட்சம் பணம் இருந்தும் இதையெல்லாம் சரிசெய்யாமல் மெத்தனம் காட்டி வருவதோ ஏனோ என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள். மேலும், இந்த குறையெல்லாம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் கவனத்திற்கும், கல்லூரிகளின் கல்வி இயக்குநர் கவனத்திற்கும், கரூரில் உள்ள தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டுமென்கின்றனர்.

பொதுநல ஆர்வலர்கள். தமிழ்நாடு அரசானது ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி உயர்கல்வியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அந்த மாணவர்களையும், அந்த கல்லூரிகளின் துறையையும் இந்தியாவிலேயே பெருமை படுத்துகின்றது. ஆனால் அரசிற்கும், அரசு நினைக்கும் திட்டங்களையும் அவமதிக்கும் அளவில் செயல்படுவர்களை அரசே முன் நின்று அவர்களை களையெடுக்க வேண்டுமென்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்  
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கை மீது பாசம் வைத்த பெற்றோர்... தொட்டியில் வீசிக். கொன்ற 5 வயது அக்கா