Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரேதப் பரிசோதனைக்கு முன்னே தற்கொலை என முடிவுக்கு வந்தது எப்படி?

பிரேதப் பரிசோதனைக்கு முன்னே தற்கொலை என முடிவுக்கு வந்தது எப்படி?
, செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (01:39 IST)
பிரேதப் பரிசோதனைக்கு முன்னே தற்கொலை என முடிவுக்கு வந்தது எப்படி? மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரவிந்தன் சிவக்குமார், “தர்மபுரி இளவரசனுக்கும் மீனாட்சிபுரம் ராம்குமாருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பிரேதப் பரிசோதனை முடியும் முன்னே இருவருக்கும் மனநல மருத்துவர்கள் தற்கொலை தான் என்று முத்திரைக்குத்தி வாய்க்கரிசி போட்டுவிட்டனர். நேற்றே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன்.
 
இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா பக்கம் 2இல் சினேகாவின் நிறுவனர் மனநல மருத்துவர் டாக்டர். லட்சுமி விஜயகுமார், ”ராம்குமார் தற்கொலை தான் செய்து கொண்டார், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தது. எவரோடும் பழகாது தனிமையில் இருக்கும் சுபாவம் படைத்தவர் (ஏதோ மீனாட்சிபுரத்தில் ராம்குமாரின் பக்கத்து வீடு போலும்?) முதல் முறை குற்றம் புரிந்தவர் (வழக்கு நிலுவையில் உள்ளது யார் குற்றவாளி என்று தெரியாமல் எல்லோரும் குழப்பத்தில் இருக்கும் நிலையில்), ஜீலை மாதத்தில் ஒரு தற்கொலை முயற்சி (அதாவது போலீஸ்காரன் தான் தன் மகன் கழுத்தை அறுத்தான் என்று ராம்குமார் தந்தை கூறிய பின்பும்) அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான எல்லா தகுதி படைத்தவராக இருந்தார் என்று சான்று அளித்துள்ளார்.
 
ராம்குமாரின் சாவில் பல சந்தேகங்கள் இருக்கும் நிலையில் இது தற்கொலை தான் என்று பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்காத நிலையில், "தற்கொலை தான்" என்று காவல்துறையின் வாதத்தை வலுப்படுத்தும் தற்கொலை தடுப்பு நிபுணர் மனநல மருத்துவர் லட்சுமி விஜயக்குமாரின் பேட்டி.
 
காவல் துறையின் வாக்குமூலத்தை வலுசேர்க்க ஒரு மருத்துவ வல்லுனரின் அறிக்கை, தற்கொலையை வேறு எப்படி தடுப்பது மின்சாரக் கம்பியை கடிக்காமல் எப்படி பாதுகாப்பது என்று வேறு எழுதியிருகிறார்.
 
நீயா நானாவில் சாமியார்களுக்கு எதிராகவும் ஆவிகளுக்கு எதிராகவும் பொங்கிய மன நல மருத்துவர்களே, உங்கள் ஆன்மாவை தொட்டு சொல்லுங்கள் தூக்கில் ஏற்றப்படும் மருத்துவ அறம் பற்றி உங்கள் கருத்தென்ன?
 
சவப்பெட்டியில் தற்கொலைதான் என்று முத்திரைக் குத்தி ஆணி அடிப்பது பற்றி உங்கள் கருத்தென்ன? எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனமாய் பல நேரங்களில் இருந்து விடுபவர் பற்றிய கருத்தென்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமார் சமையல் அறைக்கு செல்ல முடியவே முடியாது - அடித்துக் கூறும் நடராஜன்