Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பந்த்தில் பங்கேற்க முடியாது : தமிழக ஹோட்டல் சங்கம் அறிவிப்பு

பந்த்தில் பங்கேற்க முடியாது : தமிழக ஹோட்டல் சங்கம் அறிவிப்பு

பந்த்தில் பங்கேற்க முடியாது : தமிழக ஹோட்டல் சங்கம் அறிவிப்பு
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (08:59 IST)
காவிரி நீர் தொடர்பாக, தமிழகத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தமிழக ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது.


 

 
உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின் படி, தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் வெறியாட்டங்களை கண்டித்தும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் நாளை, தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.  
 
இதில் ஆளும் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தனியார் நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் இந்த போராட்டத்தில் பங்கு பெறுவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளது.
 
அதேபோல், இந்த போராட்டத்திற்கு ஆம்னி பேருந்துகள் சங்கம், லாரி சங்கம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து கோவையில் ஆட்டோ சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.  
 
சென்னையில், அதிமுக தொழிற்சங்கம் தவிர மற்ற ஆட்டோ சங்கத்தினரும் இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், மொத்தம் 2.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று  கூறப்பட்டுள்ளது. 
 
ஆனால், தமிழகத்தில் அரசு பேருந்துகள், அலுவலகங்கள் வங்கிகள் மற்றும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தமிழக ஹோட்டல் சங்கம் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், தமிழக அரசுக்கு சங்கடம் ஏற்படுத்தும் வகையில் முழுஅடைப்பு போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
 
எனவே, சென்னை உட்பட தமிழகத்தின் பல மாநிலங்களிலும் ஏராளமான ஹோட்டல்கள் திறந்துள்ளன. முக்கியமாக, சிறிய உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலமைச்சருக்கு உதவி செய்த எம்.எல்.ஏ!