Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

தமிழக எல்லைப் பகுதியில் ஒட்டி உள்ள சோதனை சாவடிகளில் தழிழக உள்துறை செயலாளர் திடீர் ஆய்வு...

Advertiesment
tamil nadu Home secretary Amudha

J.Durai

நீலகிரி , வெள்ளி, 3 மே 2024 (14:36 IST)
நீலகிரி மாவட்டம் தமிழக எல்லைப் பகுதியில் ஒட்டி உள்ள சோதனை சாவடிகளில் தமிழக உள்துறை செயலாளர் அவர்கள் பாட்டவயல் கக்கனல்லா நாடு காணி நம்பியார்குன்னு போன்ற சோதனை சாவடிகளில் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார் இதில் தற்போது இருக்கக்கூடிய சோதனை சாவடிகள் சொந்த கட்டிடத்தில் உள்ளதா அல்லது வனத்துறை சம்பந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனை சாவடியில் இருக்கக்கூடியவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதனை கேட்டு அறிவதற்காக இன்றைய தினம் வருகை தந்தார் இதில் பல்வேறு பகுதியில் உள்ள சோதனை சாவடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
 
நிகழ்வில்  காவல் துறையினர் சிறப்பு பாதுகாப்புடன் வரவேற்றனர். 
 
இந்த நிகழ்வில்  போது முதுமலை வன கலை இயக்குனர்.முதுமலை துனை இயக்குனர் திவ்யா நீலகிரி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல்.
கூடலூர் துணை கண்காணிப்பாளர் வசந்தகுமார் தேவாலா துணை கண்காணிப்பாளர் சரவணன்  கூடலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி.
 
கிராம நிர்வாக அலுவலர்கள்.காவலர்கள் ஆகியோர்கள் உடன் இருந்தனர்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்- இந்திய ஒற்றுமை இயக்கம் மனு.