பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று உள்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உள்துறை செயலாளர் அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு கோவை, ஈரோடு, சேலம், ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குரி மாவட்டங்களுக்கு 49,000 போர்வைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.