Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (12:30 IST)
ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல்பாஸ் என்ற உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்பதும் ஆனால் அதே நேரத்தில் திட்டமிட்டபடி செய்முறை தேர்வு மட்டும் நடைபெறும் என்றும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கிய செய்முறை தேர்வு இன்று மாலையுடன் முடிவடைகின்றன. இதனை அடுத்து செய்முறை தேர்வுகள் முடிவடைவதால் நாளை முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் விடுமுறையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இன்று மாலை அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதன்படி தற்போது இது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் போது 15 நாட்களுக்கு முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments