Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக அரசு உத்தரவு

Advertiesment
தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக அரசு உத்தரவு
, செவ்வாய், 8 ஜூன் 2021 (21:51 IST)
ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரவேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது
 
பார்வையில்‌ கண்ட அரசாணையின்‌ படி, நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்‌ நலன்‌ கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம்‌ வகுப்புப்‌ பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது எண மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்‌ மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்‌ வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்காண சான்றிதழ்கள்‌ வழங்குவது சார்ந்த பணிகள்‌ நடைபெற உள்ளதாலும்‌ மாணவர்கள்‌ சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள்‌ மற்றும்‌ கற்றல்‌ கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள்‌ வழங்க வேண்டி உள்ளதாலும்‌, பள்ளி வளாகம்‌ மற்றும்‌ வகுப்பறைகளை சுத்தம்‌ செய்வது சார்ந்தும்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ கல்வி தொலைக்காட்சி கற்றல்‌ சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும்‌, அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ (தொடக்கப்பள்ளி முதல்‌ மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலகப்‌பணியாளர்கள்‌ அணைவரும்‌ அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை (901) பின்பற்றி 14.06.2021 முதல்‌ பணிக்கு வருகை புரிய வேண்டுமென இதன்‌ மூலம்‌ அறிவுறுத்தப்படுகிறது.. இதனை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும்‌ உறுதிசெய்திட கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.
 
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை: நிர்ணயம் செய்தது மத்திய அரசு