இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மரணம்:
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 94 வயதான ராமகோபாலன் கடந்த 27 ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானார்.
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மரணத்தை அடுத்து அவருடைய மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது