Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசுப்பள்ளியிலும் ஹிந்தி திணிப்பு – வருகைப்பதிவேட்டில் தூக்கப்பட்ட தமிழ் !

அரசுப்பள்ளியிலும் ஹிந்தி திணிப்பு – வருகைப்பதிவேட்டில் தூக்கப்பட்ட தமிழ் !
, வெள்ளி, 19 ஜூலை 2019 (08:30 IST)
அரசுப்பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டில் இந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசுப்பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக பயோமெட்ரிக் மற்றும் கணினிகள் மூலமாக வருகைப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களது வருகையைப் பதிவு செய்ய விரல் ரேகை பதிவு செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேப்போல பள்ளி முடிந்து செல்லும் போது கைவிரல்களை வைத்து பதிவு செய்த பின்னரே செல்ல வேண்டும்.

இந்த பயோமெட்ரிக் எந்திரங்களில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழிநடத்தும் குறிப்புகள் இடம்பெற்று இருந்தன. ஆனால் இப்போது தமிழ் மொழி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஹிந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சம்மந்தமாக சமூக வலைதளங்களில் வெளியானப் புகைப்படங்களுக்கு கடுமையானக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவு முழுவதும் சட்டப்பேரவையில் தங்கிய எம்.எல்.ஏக்கள்: நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது?