Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்தய சாலை சர்க்யூட்டில் 19 வளைவுகள்.. ஃபார்முலா 4 வீரர்களுக்கு கடும் சவால்

Mahendran
சனி, 31 ஆகஸ்ட் 2024 (14:09 IST)
சென்னை தீவுத்திடலில் தொடங்கி மீண்டும் அங்கேயே சென்றடையும் வகையில் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயம் வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.

பந்தய சாலை சர்க்யூட்டில் 19 வளைவுகள் இருப்பதாக கூறப்படுவதால் வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் இந்த போட்டி பார்வையாளர்களுக்கு த்ரில்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 2.45 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பயிற்சி சுற்றுகள் நடைபெறுகின்றன என்றும், ஃபார்முலா 4 - தகுதிச் சுற்றுகள் இன்று இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் என்றும், தகுதிசுற்று அடிப்படையில் நாளை நடக்கும் பிரதான பந்தயத்தில் வீரர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஃபார்முலா 4 பந்தயம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவசர முறையீடு செய்துள்ளது. அதில் "ஃபார்முலா 4 பந்தயத்திற்கான FIA சான்றிதழ் பெற கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், 14 மணி நேர கால நீடிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை கோரிக்கை விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments