பெண்கள் உடை மாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்ட கேமிரா.. தனியார் ஜவுளிக்கடையில் விசாரணை..!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (09:12 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் ஜவுளி கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருக்கோவில் அருகே உள்ள பிரபலமான ஜவுளிக்கடை ஒன்றில் இரண்டு பெண்கள் தாங்கள் வாங்கிய ஆடைகளை உடை மாற்றும் அறைக்கு சென்று அளவு பார்த்து உள்ளனர். 
 
அப்போது ஏசி அருகே ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டதை அவர்கள் கண்டுபிடித்து கடை நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதைக்கேட்ட அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே அந்த பெண் கூறிய இடத்தில் சென்று மறைத்து வைத்துள்ள செல்போனை எடுத்தனர் 
 
அப்போது இந்த செல்போனை வைத்தவர் அந்த கடைக்கு வந்த  பெண் வாடிக்கையாளர் ஒருவர் தான் என்பதை கடை ஊழியர்கள் கண்டுபிடித்து அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். செல்போனை உடைமாற்றும் அறையில் மறைத்து வைத்த அந்த பெண்ணிடம் தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அட இதுக்கே நாக்கு தள்ளுதப்பா? திரையுலகிலும் தேர்தலை சந்திக்கும் விஜய்..

ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனத்திற்கு தடை: அமெரிக்கா அதிரடி..!

சென்னையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம், நகை எவ்வளவு?

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments