Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போராட்டத்தில் ஹீரோவான காவலர் மதியழகு: பாராட்டும் இளைஞர்கள்!

போராட்டத்தில் ஹீரோவான காவலர் மதியழகு: பாராட்டும் இளைஞர்கள்!

போராட்டத்தில் ஹீரோவான காவலர் மதியழகு: பாராட்டும் இளைஞர்கள்!
, வெள்ளி, 20 ஜனவரி 2017 (10:32 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என மதுரை அலங்காநல்லூரில் முதலில் நடந்த போராட்டத்தில் மட்டும் காவல்துறை தடியடி நடத்தியது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.


 
 
இதனையடுத்து சென்னை மெரினா உட்பட தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் போராட்டம் பெரும் தீவிரமடைந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றுவரை எங்கும் எந்தவித அசம்பாவிதங்களும், போலீஸ் தடியடிகளும், அடக்குமுறைகளும் இல்லாமல் அறவழியில் நடைபெற்று வருகிறது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இந்த போராட்டம்.
 
இதில் ஆச்சரியமளிக்கும் விதமாக போராட்டம் நடக்கும் அனைத்து இடங்களிலும் காவல்துறை போராட்டக்கரர்களுடன் நட்புடன் பழகி வருகின்றனர். போராட்டம் நடத்தும் இளைஞர்கள், மாணவர்களுக்கு பாதுகாப்பும் உதவியும் செய்து வருகின்றனர் காவல்ர்கள். பல இடங்களில் காவலர்களும் போராட்டத்துக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னை மெரினாவில் போராட்டத்திற்கு நடுவே காவலர் ஒருவர் உணர்ச்சி பொங்க பேசிய காட்சி போராட்டக்கரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவர் பேசி முடிந்ததும் அவருடைய பேச்சுக்கு ஆரவாரம் செய்த இளைஞர்களை கட்டுப்படுத்த வெகு நேரம் ஆனது.
 
போராட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவலரே, சீருடையில் இருந்து கொண்டு உணர்ச்சி பொங்க பேசியது அனைவரையும் உணர்ச்சி பொங்க வைத்தது. மதியழகு என்னும் இந்த காவலர் தமிழர்களுக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு முன்வைத்த காலை பின் வைக்கமாட்டார்கள் என கூறிய போது இளைஞர்களின் சத்தம் விண்னை பிளந்தது.
 
போராட்டத்தில் பேசிய காவலர் மதியழகு, இதுவரை எந்த போராட்டத்திற்கும் போலிசார் ஆதரவு தெரிவித்ததில்லை, ஆனால் நானே முன்வந்து ஆதரவு தெரிவிக்கிறேன், ஏன் என்றால் இது நியாமான போராட்டம். நான் பேசுவதை பல காவலர்கள் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் நான் முன் வந்து பேசினேன் என்றார்.
 
மேலும் இந்த அமைதியான போராட்டம் கண்டிப்பாக வெற்றி அடையும் போராட்டத்தில் பேசியதால் எனக்கு பயம் இல்லை எனவும் அவர் கூறினார். இதனையடுத்து ஒட்டு மொத்த கூட்டமும் காவலர் மதியழகனை தூக்கி வைத்து கொண்டாடினர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜல்லிக்கட்டு நடத்த 43 சதவீதம் எதிர்ப்பு: அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கணிப்பு!