Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை முதல் காய்கறி வாங்க வேண்டுமா? இந்த எண்ணுக்கு டயல் செய்தால் போதும்!

Advertiesment
நாளை முதல் காய்கறி வாங்க வேண்டுமா? இந்த எண்ணுக்கு டயல் செய்தால் போதும்!
, ஞாயிறு, 23 மே 2021 (14:55 IST)
தமிழகத்தில் நாளை முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றே ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்கள் வாங்கி குவித்து வருகின்றனர். இதனால் காய்கறி மார்க்கெட்டில் மற்றும் மளிகை கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் தினமும் கிடைக்கும் என்றும் காய்கறிகளை மொத்தமாக வைத்துக்கொள்ள வாங்கி வைத்துக் கொள்ள தேவையில்லை என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார்
 
அந்த வகையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ’நாளை முதல் காய்கறி மற்றும் பழங்கள் தேவைப்படுவோர் 044-2225 3884 என்ற எண்ணுக்கு டயல் செய்தால் வீட்டிற்கே கொண்டுவந்து தோட்டக் கலைத் துறையினர் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை பொது மக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவுக்கு காய்கறிகள் பழங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடக்கும்! – அன்பில் மகேஷ் திட்டவட்டம்!