இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் செம மழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (09:25 IST)
தென்மேற்கு பருவமழை சீசன் நடந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக குஜராத் தொடங்கி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் பலவற்றிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அதி கனமழையும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை அடுத்த ஒரு வார காலத்திற்கு மிதமான மழை தொடர்ந்து பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நீர்த்தேக்கங்கள் மழை காரணமாக அதன் முழுக் கொள்ளளவை எட்டி வருகின்றன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments