Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

Siva
திங்கள், 2 டிசம்பர் 2024 (07:41 IST)
வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயலின் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகமான மழை பெய்து, வீடுகளில் வெள்ளம் புகுந்ததுடன், சில வீடுகள் இடிந்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

விழுப்புரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டி வரும் கனமழையின் காரணமாக நகரின் பல குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியதுடன், சாலைகளில் ஆறுபோல் மழைநீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் உள்ள வீடுகள் மீது பாறைகள் சரிந்ததால், சில வீடுகள் தரைமட்டமாகி உள்ளன.  மேலும், பாறைகள் விழுந்த வீடுகளில் ஏழு பேர் சிக்கியுள்ளதாகவும், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி, மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் விழுப்புரம் பகுதியில், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விழுப்புரம் அருகே கொட்டும் மழையில் சாலையோரம் நின்ற மக்களுடன் சசிகலா நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.480 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

ஒரே ஒரு புயல்.. மொத்த தண்ணீர் கஷ்டமும் தீர்ந்தது.. ஏரிகளின் கொள்ளளவு நிலவரம்..!

வைகை, பல்லவன், வந்தே பாரத் ரயில்கள் ரத்து.. பயணிகள் கடும் அதிருப்தி..!

வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. இறங்கி வரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தரிசனத்திற்கு வரும் பிரபலங்கள் அரசியல் பேசக்கூடாது: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments