Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை?

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (09:20 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில்  அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று 3 மணி நேரத்தில் திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்க கடலில் நவம்பர் 15ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் எனவே நவம்பர் 14 முதல் கடலோர பகுதியில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

நாளை தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட இருக்கும் நிலையில் இன்று தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைகளுக்கு செல்ல இருக்கும் நிலையில் மழை குறித்த அறிவிப்பு பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாட்களில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! 6 நாட்களுக்கு மிதமான மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்ய பிரியா கொலை வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

'நான் அமைதியான பிரதமர் இல்லை, ஊடகங்களிடம் பேச பயந்தது இல்லை' - மன்மோகன் சிங் வாழ்க்கை எப்படி இருந்தது?

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments