அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி ஆகியவை காரணமாக தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அரபி கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 20ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு பகுதியில் உள்ள அரபுக் கடலில் காற்றழுத்த தாழ்வு, கிழக்கு பகுதியில் உள்ள வங்க கடலில் வளிமண்டல சுழற்சி ஆகியவை காரணமாக தமிழ்நாடு கேரளா ஆகிய மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.