மீண்டும் டெல்டா பகுதியில் கனமழை: பள்ளிகள் விடுமுறை

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (07:46 IST)
கஜா புயல் காரணமாக சிதைந்து போயிருக்கும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுகோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்டத்தின் ஆட்சியர் கணேஷ் அறிவித்துள்ளார்.

அதேபோல் புதுவை மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என புதுவை அரசு அறிவித்துள்ளது.

மேலும்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என் அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

இன்று நவம்பர் 19, சர்வதேச ஆண்கள் தினம்: கொண்டாட்டம் மற்றும் கவனம்!

எங்கள் போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று - பிரியா ஆனந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments