Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
திங்கள், 19 மே 2025 (15:37 IST)
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதேபோல், தமிழகம் மற்றும் வடக்குக் கேரளத்தின் மீது கீழடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதால், மழைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
 
இதன் விளைவாக, மாநிலத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் வருமாறு:
 
சென்னை
 
திருவள்ளூர்
 
செங்கல்பட்டு
 
காஞ்சிபுரம்
 
வேலூர்
 
சேலம்
 
தர்மபுரி
 
விழுப்புரம்
 
ராணிப்பேட்டை
 
கிருஷ்ணகிரி
 
கள்ளக்குறிச்சி
 
கடலூர்
 
திருப்பத்தூர்
 
சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் மிதமான மழை வாய்ப்பும் உள்ளது.
 
மழை ஏற்படும் பகுதிகளில் பொதுமக்கள்  வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியாயம் கேட்டு நானே தலைமைச் செயலகம் வருவேன் ஸ்டாலின் சார்! - விஜய் எச்சரிக்கை!

திமுக - பாஜகதான் எதிரி? அவர்களோடு என்றும் கூட்டணி கிடையாது! - கறாராக போட்டு உடைத்த விஜய்!

அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? பொறுத்திருந்து பாருங்கள்: நயினார் நாகேந்திரன்

காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்.. 3 பேர் தலைமறைவு..!

மரணத்திற்கு முன் போயிங் காக்பிட்டில் இருந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி? வைரலாகும் புகைப்படங்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments