இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Prasanth Karthick
ஞாயிறு, 4 மே 2025 (18:27 IST)

தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் 10 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கோடைக்காலம் நிலவி வரும் நிலையில் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. கத்தரி வெயில் தொடங்கவுள்ள நிலையில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வெப்பத்தை குறைக்கும் விதமாக காற்றுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments