நாளை தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவித்துள்ளது.
சென்னை உள்பட கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது
குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இரவில் மழை பெய்தது. இந்த நிலையில் நாளை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சிலமணி நேரங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்று அறிவித்த வானிலை ஆய்வு மையம் தற்போது 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது