Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (09:55 IST)
இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் தென்கிழக்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்னும் மூணு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்கள் பின் வருவன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம்

 சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை சில பகுதிகளில் மட்டும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு! ராகுல்காந்தி வேண்டுகோள்!

தெருநாய்கள் தொல்லை தாங்கல.. ஏதாவது பண்ணுங்க! - மேயர் பிரியாவுக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்!

சிக்கன் எலும்பு தொண்டையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு.. வாழப்பாடி அருகே சோகம்..!

கோடை வெப்பத்தை தணிக்க பாராசிட்டமால் போடக்கூடாது: சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments