சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 18 ஆம் தேதி சுந்தரம் என்ற முதியவரை மாடு முட்டியது. இந்த நிலையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மாடு முட்டியதில் காயமடைந்து 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் இன்று மரணமடைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பல தெருக்களில் மாடுகள் திரிந்து கொண்டிருப்பதை அடுத்து மாடுகள் திரிந்து வருவதை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி போதுமான நடவடிக்கை எடுத்தது. மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனாலும் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை தெருவில் தான் மேய விட்டிருந்தனர் என்பதும் இதனால் பாதசாரிகளுக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அரும்பாகத்தில் ஒரு சிறுமியை மாடு முட்டியதால் அந்த சிறுமி படுகாயம் அடைந்து அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேறினார். ஆனால் சென்னை திருவல்லிக்கேணியில் சுந்தரம் என்ற முதியவரை மாடு முட்டிய நிலையில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் மரணம் அடைந்தார். இந்த மரணம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது