இன்னும் சில மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை அறிவிப்பு

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (14:57 IST)
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மையம் நகர்ந்து வருவதால் இந்த காற்றழுத்த தாழ்வு மையம் 24ஆம் தேதி புயலாக மாறும் என்றும் 25ஆம் தேதி கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் அதாவது நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அதேபோல் அக்டோபர் 23, 24, 25, 26 ஆகிய நாட்களும் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments