Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சிலமணி நேரங்களில் 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (13:21 IST)
இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஜூலை 10 முதல் 15 வரை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது 
 
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் உள்ள கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையின் பல பகுதிகளில் இன்று மாலை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேற்கண்ட 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்.. நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை..!

பாம்பன் அருகே 4 கிராமங்களில் உள்வாங்கிய கடல்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பயண திட்டத்தை மாற்றுங்கள்.. சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புபவர்களுக்கு அறிவுரை..!

இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை.. அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments