சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை.. குளிர்காற்று அடிப்பதால் மக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (16:55 IST)
சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், கிண்டி, அண்ணா சாலை, எழும்பூர், சென்ட்ரல், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது என்பதும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் கடந்த சில மணி நேரங்களாக குளிர்ந்த காற்று வீசுவதால் சென்னை நகரமே ஊட்டி கொடைக்கானல் போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து இன்னும் சில நாட்களுக்கு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடைபெற எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்  

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் ஆஜர்..!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்தார்.

திமுக மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது: செங்கோட்டையன் குற்றச்சாட்டு..!

தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments