Publish Date: Wed, 01 Nov 2023 (11:16 IST)
Updated Date: Wed, 01 Nov 2023 (11:19 IST)
கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் சென்னையில் இன்று 3வது நாளாகவும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.232 குறைந்து உள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து ரூபாய் 5686.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 232 குறைந்து ரூபாய் 45488.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6156.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49248.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 120 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 77.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77000.00 எனவும் விற்பனையாகி வருகிறது