வங்க கடலில் இன்று மாலை புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை 5 மணிக்கு மேல் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.