இன்னும் சிலமணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (13:37 IST)
தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இன்னும் பல மணி நேரத்தில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை நீலகிரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை  பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments